Friday, July 8, 2011

குவிந்து கிடந்த தங்க குடங்கள்

இந்தியாவில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலும் ஒன்று. 108 வைணவ தலங்களில் ஒன்றான இந்த கோயில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக கூறப் படுகிறது. மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்குச் சொந்தமான தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கோயில்களில் பாதுகாத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. ஊரில் உள்ள செல்வந்தர்கள், நிலப் பிரபுக்கள் போன்றோரும் நகை, பொருட்களை கோயில்கள் வசம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்காகவே கோயில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மற்ற நாடுகள்,சமஸ்தானங்கள் மீதான படையெடுப்பின்போது ‘சம்பாதித்த‘ நகைகளும் கோயில்களில்தான் பத்திரப்படுத்தப் பட்டுள்ளனவாம்.அந்த வகையில் திருவிதாங்கூர் மன்னர்கள் அரண்மனைக்கு சொந்தமான விலை மதிக்க முடியாத ஆபரணங்களை பத்மநாபசுவாமி கோயிலில் மூல விக்ரகத்திற்கு பின்புறம் உள்ள 6 ரகசிய அறைகளில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இதில் மிக அரிய ஆபரணங்கள் 2 மிகச்சிறிய ரசகிய அறைகளில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்மநாபசுவாமி கோயிலை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் ரகசிய அறையில் உள்ள நகைகள் மற்றும் பொருட்களை கணக்கெடுத்து மதிப்பீடு செய்யவேண்டும் என்று கோரி திருவனந்தபுரத்தை சேர்ந்த சுந்தர்ராஜ அய்யர் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதி மன்றம் கோயிலை அரசு கையகப்படுத்தலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கோயிலை அரசு கையகப் படுத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்தது. ஆனால் கோயில் நகைகளை மதிப்பீடு செய்யலாம் என தீர்ப்பளித்தது. இதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே.ஜெயக்குமார், கேரள தொல்பொருள்துறை இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் முன்னிலையில் ரகசிய அறையை திறந்து நகைகளை மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் உச்ச நீதிமன்றம் குறிப் பிட்ட 7 பேர் தவிர மற்ற யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோயிலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 6 ரகசிய அறைகளுக்கும் ஏ முதல் எப் வரை பெயரிட்டுள்ளனர். இதில் ஏ, பி ஆகிய இரண்டு அறைகள் 150 வருடங்களாக திறக்கப்படாத அறை. முதலில் இந்த அறைகளை திறந்தால் சிக்கல் ஏற்படும் என கருதிய அதிகாரிகள் திருவிழாக்காலங்களில் திறக்கப்படும் அறைகளையும், பூஜை பொருட்கள் வைத்திருக்கும் அறைகளை முதலில் திறக்க முடிவு செய்தனர்.

இதன்படி கடந்த 3 நாட்களில் சி முதல் எப் வரையிலான 4 அறைகள் திறந்து பரிசோதிக்கப்பட்டன. இந்த அறைகளில் இருந்த நகைகள் முழுவதும் கணக்கெடுக்க பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்க கிரீடங்கள், தங்க குடங்கள் போன்றவை இருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ^1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ‘ஏ’, ‘பி’ என்று அடையாளமிடப்பட்டுள்ள இரண்டு அறைகளில் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ள பொருட்கள் தொடர்பாகத்தான் பல்வேறு யூகங்களும், மர்மங்களும், புதையல் தகவல்களும் கசிந்தவண்ணம் உள்ளன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த தங்கம், ரத்தினங்கள் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் இந்த அறைகளில் பாதுகாக்கப்படலாம் என்பதே அந்த எண்ணமாகும்.

திருவிதாங்கூர் ராஜகுடும்பத்திற்கு மன்றோ சாகிப் தங்கத்தினால் ஆன ஒரு குடையை பரிசாக அளித்திருந்தார் என்று வரலாற்று புத்தகங்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. இதுபோன்ற ஏராளமான பரிசு பொருட்களும், மன்னர்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி காலகட்டங்களில் பயன்படுத்த திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த நிதியாதாரங்களும் இந்த இரு அறைகளிலும் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் இந்த அறைகள் இப்போதைக்கு திறக்கப்படுவது இல்லை என்று கூறப் படுகிறது. இது தொடர்பான இறுதி முடிவுகள் பின்னரே எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. நூற்றாண்டுகளாக திறக்கப்படாததால் அறையின் பாதுகாப்பு தொடர்பாகவும், அறையில் உள்ள வாயுக்கள் நிலை தொடர்பாகவும் பரிசோதனை நடத்தப்பட வேண்டியுள்ளது. தலைமை பொறியாளர் (சிவில்) ஒருவர் இதற்காக நியமிக்கப் பட்டுள்ளார்.

மன்னர் பத்மநாபர்

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் அனந்தபத்மநாபசுவாமி தவிர, நரசிம்மர், கிருஷ்ணர் சன்னதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. பத்மநாப சுவாமி ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலில் ‘எட்டுவீட்டில் பிள்ளமார்‘ என்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தது. அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக 1729 முதல் 1758 வரை இருந்த ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி பல அனுஷம் திருநாள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கைப்பற்றினார். ‘பத்மநாபசுவாமிதான் இந்த சமஸ்தானத்தின் மன்னர். அவருக்கு சேவை செய்யும் அடிமைகள் நாங்கள்‘ என்று அறிவித்த மன்னர், ‘பத்மநாபதாசர்‘ என்பதை தங்கள் வம்சத்தின் பெயராக்கினார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகவே பத்மநாபசுவாமி கருதப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பத்மநாபசுவாமி கோயில் திருவிழாக்களின்போது, ‘ராஜா பத்மநாபசுவாமிக்கு‘ 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

பதிவேடுகள்

அளவு, எடை ஆகியவற்றை பதிவு செய்து எண்கள் போடப்பட்டு பதிவு செய்யப்பட்ட கோயில் பொருட்களின் பலவற்றிலும் மேல்பகுதியில் மலையாள எழுத்துகளும், வட்டெழுத்து போன்று தோன்றுகின்ற எழுத்துகளும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது கோயில் பொருட்கள் பண்டைகாலத்திலேயே இதுபோன்று பதிவேடுகளில் பதிவு செய்திருக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுவதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பதிவேடுகள் தொலைந்து போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. கோயிலில் பாதுகாத்து வைக்கப்பட்டு வரும் பொருட்களின் விபரங்கள் வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ள நிலையில் கோயிலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் அமைப்புகள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

குவிந்து கிடந்த தங்க குடங்கள்!

‘சி‘ பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை: கழுத்து குடம் - 20, தங்க எழுத்தாணி - 1, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் - 1, சிறிய தங்க குடங்கள் - 340, வெள்ளி விளக்கு - 30, பால்கிண்டி - 30,ஷ் சிவன் சிலைகள், நாகர் சிலைகள். இதுதவிர சிறியதும் பெரியதுமாக ஏராளமான மோதிரங்கள், தங்க வளையங்கள், நெற்றிச்சுட்டி ஆகியவையும் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு [450 கோடி என கூறப்படுகிறது.

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் பாதாள அறைகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பாத்திரங்கள், தங்க கட்டிகள் கிடைத்துள்ளன. பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் மற்ற இரு அறைகளும் விரைவில் திறக்கப்பட உள்ளது. அவற்றில் வைரம், வைடூரியம் உள்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஅனந்த பத்மாநாபசுவாமி கோயில் உலகப் புகழ் பெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவள்ளூர் வீரராகவர் போல பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள். பிரமாண்ட உருவம் என்பதால் சுவாமியை ஒரே வாசல்படி வழியாக பார்க்க முடியாது. தலையை ஒரு வாசலிலும், மார்பு பகுதியை ஒரு வாசலிலும் கால் பகுதியை இன்னொரு வாசலிலும் தரிசிக்க வேண்டும். திருவாங்கூர் சமஸ்தான மன்னர் மார்த்தண்ட வர்மா மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்பு புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கோயில். இதனால், திருவாங்கூர் சமஸ்தான குடும்பத்தினரின் பரம்பரையினராலேயே கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

இந்நிலையில், பத்மநாபசுவாமி கோயிலுக்குள் இருக்கும் சுரங்க அறைகளில் ஏராளமான தங்க, வைர நகை புதையல்கள் இருப்பதாகவும் அவற்றை கணக்கெடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் வக்கீலும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான டி.பி.சுந்தரராஜன், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, பாதாள அறைகளை திறந்து சோதனை நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இப்பணிக்காக 7 பேர் குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்தது. நீதிபதிகள் எம்.என்.கிருஷ்ணன் உள்ளிட்ட 2 பேரை பார்வையாளர்களாகவும் நியமித்தது. பாதாள அறைகளை திறந்து ஆய்வு மேற்கொள்ளும் பணி நேற்று முன்தினம் நடந்தது. நீதிபதிகள் தலைமையில் குழு உறுப்பினர்கள் நீதிபதி சி.எஸ்.ராஜன், கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி ரவிவர்மா, திருவாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட மகாராஜா, கோயில் செயல் அலுவலர் வி.கே.ஹரிகுமார், மனுதாரர் சுந்தரராஜன், கூடுதல் தலைமை செயலர் ஜெயகுமார், ஆவணங்கள் காப்பக இயக்குனர் ரெஜிகுமார் ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

கோயிலின் 6 பாதாள அறைகளையும் திறப்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தினர். 6 அறைகளும் ஏ,பி,சி,டி,இ,எப் என்று அடையாளம் குறிக்கப்பட்டது. சி முதல் எப் வரையிலான 4 அறைகளையும் முதலில் திறப்பது, 150 ஆண்டுகளாக மூடியே இருக்கும் ஏ, பி அறைகளை கடைசியாக திறப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. கோயிலின் ‘நளம்பலம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் வடமேற்கு மூலையில் இருந்த ‘சி’ பாதாள அறையை முதலில் திறக்க முடிவானது. ராகுகாலம் முடிந்த பிறகு இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. 10.30 மணியளவில் சுரங்க அறை திறக்கப்பட்டது. தங்க நகை மதிப்பீட்டாளர்கள் 3 பேரும் டிஜிட்டல் தராசுடன் உடன் வந்திருந்தனர்.

தங்க நகைகள், தங்கம், வெள்ளி பாத்திரங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றை அதிகாரிகள் ஒவ்வொன்றாக கணக்கெடுத்தனர். பின்னர் அவை டிஜிட்டல் தராசில் எடை போடப்பட்டது. அந்த அறையில் இருந்த பொருட்கள் மட்டும் ரூ.450 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று நகை மதிப்பீட்டாளர்கள் கூறினர். எடுக்க எடுக்க நகைகள், பாத்திரங்கள் வந்துகொண்டே இருந்ததால் கணக்கெடுக்கும் பணி இரவு 7 மணி வரை நீடித்தது. நளம்பலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ‘டி’ அறையும் தென்கிழக்கில் தேக்கடம் நரசிம்மசுவாமி கோயில் செல்லும் வழியில் உள்ள ‘எப்’ அறையும் நேற்று திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கிரீடங்கள், தங்க தட்டுகள், ஏராளமான மரப்பெட்டிகளில் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது. ‘இ’ அறை இன்று திறக்கப்படுகிறது.

கோயிலின் தலைமை நம்பூதிரி ‘பெரியநம்பி’ எனப்படுகிறார். அவரும் இன்னொரு அர்ச்சகர் ‘தேக்கடம்நம்பி’ என்பவருமே இந்த அறைகளுக்கான பொறுப்பாளர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் கூறுகையில், ‘‘கோயிலின் சொத்துகளாக கருதப்படும் தங்க குடங்கள், தங்க பாத்திரங்கள், தங்க, வெள்ளி நகைகள் போன்றவை இந்த அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. முக்கிய பூஜைகள், திருவிழாக்களின்போது அறைகள் திறக்கப்பட்டு இவை வெளியே எடுக்கப்படும். பூஜையில் பயன்படுத்தப்பட்ட பிறகு, மீண்டும் சுத்தம் செய்யப்பட்டு பாதாள அறையிலேயே வைக்கப்பட்டுவிடும்’’ என்றனர்.

ஏ, பி பாதாள அறைகள் அனேகமாக 1860-ம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 150 ஆண்டுகளாக திறக்கப்படாத அந்த அறைகளில் வைரம், வைடூரியங்கள் என பல கோடி மதிப்பிலான ஏராளமான நகைகள், அரிய பொக்கிஷங்கள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இவற்றை கடைசியாக திறக்கலாம் என்று ஆய்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். கணக்கெடுக்கும் பணிக்காக மட்டுமே இவை திறக்கப்படும். கணக்கெடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்படும். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஏ, பி பாதாள அறைகளை என்று திறப்பது என அப்போது முடிவு செய்யப்படும் என்று நீதிபதி கிருஷ்ணன் தெரிவித்தார்.

பாதாள ரகசியம்

மன்னர்கள் காலத்தில் அரண்மனைக்குச் சொந்தமான தங்கம், வைரம், விலையுயர்ந்த பொருட்களை கோயில்களில் பாதுகாத்து வைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. ஊரில் உள்ள தனவந்தர்கள், நிலப் பிரபுக்கள் போன்றோரும் பழங்காலத்து நகை, பொருட்களை கோயில்கள் வசம் கொடுத்து வைத்திருந்திருக்கிறார்கள். அதற்காகவே நிறைய கோயில்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டு அதில் ரகசிய அறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. மற்ற சமஸ்தானங்கள் மீதான படையெடுப்பின்போது ‘சம்பாதித்த’ நகைகளும் கோயில்களில்தான் பத்திரப்படுத்தப் பட்டுள்ளனவாம். பத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் பதுங்கியிருக்கும் தங்கப் புதையல் பற்றிய தகவல்கள், நாடு முழுக்க உள்ள கோயில்களை சிலிர்த்தெழ வைத்திருக்கிறது. கோயில்களுக்கு புகழ்பெற்ற தமிழகத்திலும் இதுபோன்ற புதையல்கள் இருக்கலாம் என்று ஆய்வுத் துறையினர் பேசத் தொடங்கியுள்ளனர். சுரங்க அறைகள் இருப்பதாக சொல்லப்படும் புராதன கோயில்களை முதற்கட்டமாக கணக்கெடுத்து ஆராய்ந்தால் தமிழகமும் வளம் பெற வாய்ப்பு இருக்கிறது என்ற கருத்து பரவி வருகிறது.

தங்க குடம் முதல் நெற்றி சுட்டி வரை

‘சி’ பாதாள அறையில் இருந்த தங்க நகைகள், பாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவை: கழுத்து குடம் - 20, தங்க எழுத்தாணி - 1, கைப்பிடியுடன் கூடிய தங்க குடம் - 1, சிறிய தங்க குடங்கள் - 340, வெள்ளி விளக்கு - 30, பால்கிண்டி - 30, சிவன் சிலைகள், நாகர் சிலைகள். இதுதவிர சிறியதும் பெரியதுமாக ஏராளமான மோதிரங்கள், தங்க வளையங்கள், நெற்றிச்சுட்டி ஆகியவையும் கிடைத்துள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.450 கோடி என கூறப்படுகிறது.

குண்டுகள் முழங்க பத்மநாபருக்கு மரியாதை

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில். பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் அனந்தபத்மநாபசுவாமி தவிர, நரசிம்மர், கிருஷ்ணர் சன்னதிகளும் இக்கோயிலில் இருக்கின்றன. பத்மநாப ஷேத்திரம் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலில் ‘எட்டுவீட்டில் பிள்ளமார்’ என்பவர்கள் நிர்வாகத்தில் இருந்தது. அவர்களிடம் இருந்து கோயில் நிர்வாகத்தை திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராக 1729 முதல் 1758 வரை இருந்த ஸ்ரீபத்மநாபதாச வாஞ்சி பல அனிழம் திருநாள் மகாராஜா மார்த்தாண்ட வர்மா கைப்பற்றினார். ‘பத்மநாபசுவாமிதான் இந்த சமஸ்தானத்தின் மன்னர். அவருக்கு சேவை செய்யும் அடிமைகள் நாங்கள்’ என்று அறிவித்த மன்னர், ‘பத்மநாபதாசா’ என்பதை தங்கள் வம்சத்தின் பெயராக்கினார். திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவாகவே பத்மநாபசுவாமி கருதப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில், பத்மநாபசுவாமி கோயில் திருவிழாக்களின்போது, ‘ராஜா பத்மநாபசுவாமிக்கு’ 21 குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்படும். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நடைமுறை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

World Richest Temple





திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில், விலை மதிப்பிட முடியாத, காலத்தால் பழமையான பொருட்கள், மூன்று அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பே, 90 ஆயிரம் கோடி ரூபாய். இதுவரை கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்கள், கோவில் வசமே இருக்க வேண்டும் என வரலாற்று அறிஞர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பொக்கிஷத்தை எப்படிஇனி பாதுகாப்பது என அவர்கள் கவலை தெரிவித்தனர்.

பத்மநாப சுவாமி கோவில், தற்போது திருவிதாங்கூர் அரச குடும்பத்திடம் உள்ளது. கோவில் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதால், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என டி.பி.சுந்தரராஜன் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு வழக்கு தொடுத்தார்.இவ்வழக்கின் எதிரொலியாக, கோவிலின் ஆறு பாதாள அறைகளை திறந்து பரிசோதிக்கும்படி, ஏழு பேர் கொண்ட குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது. கேரள ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எம்.என். கிருஷ்ணன் தலைமையிலான இக்குழு, கடந்த 27ம் தேதி, அறைகளை திறக்கத் துவங்கியது.இதுவரை மூன்று அறைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி, திறக்கப்பட்ட அறையில் இருந்த பொருட்களின் பட்டியல், 2ம் தேதி தயாரானது. இன்னும் முழுமையான அளவில் பொக்கிஷம் குறித்த கணக்கெடுப்பு முடியவில்லை.



பொக்கிஷம்திறக்கப்பட்ட மூன்று அறைகளில் உள்ளவற்றின் மதிப்பு மட்டுமே இன்றைய நிலையில், 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். நான்கடி உயரமுள்ள, தங்கத்தால் ஆன விஷ்ணு சிலை மற்றும் பல்வேறு சிலைகள், 18 அடி நீள தங்க மாலை என, காலத்தால் மதிப்பிட முடியாத பழமையான பொருட்கள் இந்த அறைகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதே நேரம், திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்த போது, அப்போதைய விஜயநகரப் பேரரசுடன் கொண்டிருந்த வர்த்தகத் தொடர்பால், விஜயநகர காலத்து நாணயங்களும் இந்த அறைகளில் கிடைத்துள்ளன. இவை, வரலாற்று அறிஞர்களால் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றன.அறைகள் திறக்கப்படுவதற்கு முன் பேட்டியளித்த குழுத் தலைவர் முன்னாள் நீதிபதி கிருஷ்ணன், இப்பணிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்குள் முடிந்து விடும் என நம்புவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போதைய நிலையில் இப்பணி மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகிறது.



மன்னர் குடும்பத்து எளிமை : இந்தியாவில் அரச குடும்பங்களின் பராமரிப்பில் இருந்த கோவில் செல்வங்கள் அன்னியரால் கொள்ளையடிக்கப்பட்டதும், பல்வேறு வழிகளில் அக்குடும்பங்களால் செலவழிக்கப்பட்டதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள இந்த அறைகளில் இருந்து ஒரு குண்டுமணி அளவுகூட காணாமல் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு, பத்மநாப சுவாமி மீது அரச குடும்பம் கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி தான் காரணம் என, மக்கள் கருதுகின்றனர்.கி.பி., 13ம் நூற்றாண்டில், மாலிக்கபூர் படையெடுப்பு நடந்த போது, பாண்டிய மன்னராக இருந்த வீரபாண்டியன் வலுவற்று தோல்வி அடைந்ததால், கோவில்களில் ரகசிய அறைகள் ஏற்படுத்தி பாதுகாப்பை அதிகப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது.



பாதுகாப்பு எவ்வாறு?பிரிட்டிஷ் ஆட்சி முடிந்த பின்பு, மாநில மற்றும் மத்திய அரசுகளின் கைகளுக்கு வந்த பல்வேறு கோவில்களில் இருந்த அளப்பரிய செல்வங்கள் அனைத்தும் அரசின் கைகளுக்கே சென்றதும், அதன் பின் அவை பற்றிய தகவல்களே கிடைக்காததும், அல்லது அவை தவறாகப் பயன்படுத்தப்பட்டமையும் தான் அறிஞர்களின் கவலைக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.



இதுகுறித்து, இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவர் நாராயணன் கூறியதாவது:இந்தச் செல்வங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்கக் கூடாது. இவை அனைத்தும் பழைய நிர்வாக முறைப்படி திருவிதாங்கூர் அரச குடும்பத்தாலேயே கோவிலில் பாதுகாக்கப்பட வேண்டும்.அரசுகளால் எடுக்கப்பட்ட கோவில்களில் இருந்த செல்வங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும், மோசடி செய்யப்பட்டதும் நாம் அறிவோம். அது போன்ற சம்பவங்கள் இந்தக் கோவிலில் நடக்கக் கூடாது.கோவிலிலேயே ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, அதில் சில முக்கியமான பொருட்களை மட்டும் காட்சிக்கு வைத்து விட்டு, மற்றவற்றை ரகசிய அறைகளில் வைத்து பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் தெரிவித்தார்.



வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளரான எம்.ஜி.சசிபூஷண், "வருங்கால தலைமுறைக்கும் இவை பற்றிய தகவல்கள் சேர வேண்டுமானால் இவை அனைத்தும் உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்' என்றார்.



அதேபோல், வி.எச்.பி., நாயர் சர்வீஸ் சொசைட்டி, நாராயண தர்ம பரிபாலன யோகம் போன்ற அமைப்புகள், இந்தச் செல்வங்கள் அனைத்தையும் மத்திய அல்லது மாநில அரசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், இவற்றை கோவில் சொத்துகள் என அறிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளன.இதனிடையே, நடைபெற்று வரும் கணக்கெடுப்பு பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை என்று, மன்னர் வாரிசான உத்தரம் திருநாள் மார்த்தாண்ட வர்மா நேற்று தெரிவித்தார்.



மக்களை ஈர்க்கும் கோவில்:* கி.பி., 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த நம்மாழ்வார் இக்கோவிலைப் பாடியுள்ளார்.
*தமிழகம் மற்றும் கேரள கட்டடக் கலைகள் இணைந்த கோவில் இது.
*கி.பி., 1686ல் இக்கோவில் முழுவதும் தீக்கிரையானதால், அப்போதைய மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் புதுப்பிக்கப்பட்டது.
*மரத்தால் ஆன மூலவர் விக்ரகம் தீயில் சேதம் அடைந்ததால், 12 ஆயிரம் சாளக்கிராமக் கற்கள் மற்றும் கடுசர்க்கரையால் மூலவர் புதிதாக உருவாக்கப்பட்டார்.
*திருவிதாங்கூர் சம்ஸ்தானத்திற்கு தலைவர் பத்மநாப சுவாமி தான் என்பதால் அவருக்கு, பிரிட்டிஷ் ஆட்சியில், 21 குண்டுகள் முழக்கி மரியாதை செய்யப்பட்டது. சுதந்திர இந்தியாவில் மன்னர் மானிய ஒழிப்பு வரும் வரை இந்த மரியாதை நீடித்தது.
*பிரிட்டிஷ் ஆட்சியில், அப்போதைய மன்னர் சித்திரைத் திருநாள், "ராஜப்ரமுக்' (கவர்னர்) என்று பட்டம் சூட்டப்பட்ட போதும் கூட, அவர் கோவில் சொத்துகளை முறையாகவே பராமரித்து வந்தார்.
*நீண்ட காலமாக மன்னர்கள், மக்களுக்கு விதிக்கும் அபராதம் இக்கோவிலில் தங்க ஆபரணங்களாகச் சேர்க்கப்படுவது வழக்கம். கோவில் பொருளை எவரும் திருட முற்பட்டதில்லை என்பதும் இங்கேயுள்ள தனிச்சிறப்பாகும்.



திருவனந்தபுரம்: திருப்பதி ஏழுமலையானை சொத்து மதிப்பில் மிஞ்சிய பத்மநாபர் கோயிலுக்கு லட்சம் கோடிகளை தாண்டும் இந்த பொக்கிஷங்கள் குவிந்தது எப்படி என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒருங்கிணைந்த இந்தியாவில் குறுநில மன்னர் சமஸ்தானங்கள் சேர்க்கப்பட்டபோது, 1949 ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானமும் சேர்க்கப்பட்டது. தெற்கில் கன்னியாகுமரி, வடக்கே எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா வரை நீண்டிருந்தது. தமிழ்நாட்டின் பத்மநாபபுரம் தான் அப்போது அதன் தலைநகராக இருந்தது. பின்னர் தான், திருவனந்தபுரமாக மாற்றப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தான முதல் மன்னர் அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. அவருக்கு பின் கார்த்திகை திருநாள் ராம வர்மா ஆட்சி செய்தார். அப்போது தான் திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாறியது.

1750 ல் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஆரம்பித்தபோதே, அரசாட்சியும், பத்மநாபர் கோயிலும் இணைந்தே இருந்தது. முதல் மன்னர், என் சொத்துக்கள் எல்லாம் பத்மநாபருடையது. நான் அவருடைய சேவகன்’ என்று அறிவித்து தன் பெயரை பத்மநாப தாசர் என்றும் மாற்றிக்கொண்டவர். கடந்த 1813 ல் இருந்து 1846 வரை ஆண்ட, சுவாதித்திருநாள், பிரபலமான கர்நாட இசை கலைஞராக இருந்தவர். ஆங்கில மொழி பற்று கொண்டவர். 1921 1992 ல் வாழ்ந்த கடைசி மன்னர் சித்திரை திருநாள் பலராம வர்மா தான் இந்தியாவில் மரண தண்டனையை ஒழித்த முதல் சமஸ்தான மன்னர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1936ல், திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யர் யோசனைப்படி, தீண்டாமையை ஒழித்து, கோயிலுக்குள் எல்லாரும் போய் தரிசிக்க வைத்தவரும் இவர் தான்.

பத்மநாபர் கோயிலுக்கு தங்கள் சொத்துக்களை அப்படியே தந்தவர்கள் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்கள் என்பதை பல மலையாள இலக்கியங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இப்போது கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்கள் குறித்து, 1941 ல் கவிஞர் பரமேஸ்வர அய்யர் தன் பிரதானபட்டா மதிளகோம் பதிவேடுகள் என்ற புத்தகத்தில் குறிப்புகளை எழுதியுள்ளார். இதுபோல, கொட்டாரம் (அரண்மனை) மானுவல் 12 பகுதிகள் அடங்கியது. அவற்றில், பொக்கிஷங்கள் குறித்து குறிப்புகள் உள்ளன என்றார் வரலாற்று ஆய்வாளர் சசிபூஷண். திருவிதாங்கூர் பரம்பரையில் முதல் மன்னர் முதல் கடைசி மன்னர் மட்டுமல்ல, இப்போதுள்ள வாரிசுகள் வரை, சொத்துக்கள் பற்றி கணக்கில் தெளிவாக இருந்துள்ளனர். கோயிலுக்கு தந்தபின், சொத்துக்களை கட்டிக்காத்து வந்துள்ளனரே தவிர, அவற்றில் இருந்து செலவு செய்ததே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பத்மநாபர் கோயிலுக்கு எல்லா சொத்துக்களையும், தங்க, வெள்ளி நகைகள், பொருட்களை தந்தபின், அவற்றை பாதுகாத்து வந்த சமஸ்தான மன்னர்கள், கோயில் நிர்வாக செலவுக்கு , ஆட்சியில் உற்பத்தி செய்யப்பட்ட நறுமணப்பொருட்கள் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இருந்து தான் எடுத்துக்கொண்டுள்ளனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன. திருவிதாங்கூர் பரம்பரை குடும்பத்தின் தலைவராக இப்போது இருப்பவர் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. இதுவரை இருந்த அரச பரம்பரை மன்னர்களை போலவே, அவரும் எளிமையானவர். கோயில் விஷயத்தில் தலையீடு செய்ததில்லை. கோயிலில் லட்சம் கோடிகளை தாண்டி, பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் மவுனம் கலைப்பதை தான் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

மண்ணைகூட தட்டியவர்கள்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர்கள், பத்மநாபர் கோயிலுக்கு ஒரு நாள் கூட வராமல் இருந்ததில்லை. கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு வெளியேறும் போது, கோபுர வாசலில், கால்களில் இருந்த மண்ணை தட்டி விட்டு செல்வர். மண்ணை கூட எடுத்துசெல்லாதவர்கள் என்பதை இப்படி நிரூபித்துள்ளனர்.

கண்தான் பேசும்

இப்போது பொக்கிஷங்கள் கணக்கெடுப்பு குறித்து உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா கூறியது என்ன தெரியுமா? ‘கடைசி பைசா எண்ணி முடிக்கும் வரை, என் கண்கள் தான் பேசும்’

ரூ.151.55 கட்ட வேண்டும்

பத்மநாபர் கோயிலுக்கு சமஸ்தானத்தை சேர்ந்த தலைவர் தினமும் வர வேண்டும் என்பது காலம் காலமாக எழுதப்பட்ட அரச விதி. இதை இன்று வரை யாரும் மீறியதில்லை. அப்படி ஒரு நாள் வராமல் இருந்தால், ரூ.151.55 அபராதமாக கோயிலில் கட்ட வேண்டும்.

பக்கிங்ஹாமுக்கு மிளகு ஏற்றுமதி

மூலம் திருநாள் ராம வர்மா; இவர் தான் அடுத்த அரச பரம்பரை வாரிசு தலைவர். ஆஸ்பின்வால் கம்பெனி என்ற நறுமணப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். ஏலக்காய், லவங்கம், கிராம்பு, மிளகு போன்ற நறுமணப்பொருட்களை ஏற்றுமதி செய்கிறார். பிரிட்டீஷ் ராணி எலிசபெத் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனைக்கு இப்போதும் மிளகு ஏற்றுமதி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.